வெள்ளி, 17 ஜூலை, 2015

பரங்கிப்பேட்டையில் தொடங்கியது பெருநாள் கொண்டாட்டம்....

பரங்கிப்பேட்டை: ஈகைத்திருநாள் என்றழைக்கப்படும், நோன்பு பெருநாள் இன்று (17.07 .2015) பரங்கிப்பேட்டை நகரில் சர்வேதசப்பிறை மற்றும் ஹிஜ்ரா கமீட்டி கணக்கீட்டு பிறையை பின்பற்றுபவர்களால் கொண்டாடப்படுகிறது.
பிறை கணக்கீடை அடிப்படையாக கொண்டு கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் நோன்பு நோற்றவர்களும், சர்வதேச பிறையை அடிப்படையாக கொண்டு கடந்த மாதம் 18-ஆம்
தேதி முதல் நோன்பு நோற்றவர்களும் நேற்றோடு ரமலான் மாதத்தினை பூர்த்தி செய்து இன்று பெருநாள் கொண்டாடி வருகின்றனர்.
இன்று காலை சுமார் 7.15 மணிக்கு கலிமா நகரில் உள்ள திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு தொழுகையில் ஃபைஸல் தொழுகை நடத்தினார், தொழுகைக்கு பின்னர்  குர் ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் தமிழில் உரை நிகழ்த்தப்பட்டது.
 
 





 


news:mypno

0 கருத்துகள்:

கருத்துரையிடுக