சனி, 20 ஜூன், 2015

ஸவர்மா‬ (அரபிய சாண்ட்விச்) - செய்முறை


இன்று அரபிய உணவுகளின் கிங் என்று சொல்லக் கூடிய அளவுக்கு பிரசித்திப்பெற்ற ஸ்வர்மா நம் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம் ..

தேவையானப் பொருட்கள்:
ரொட்டி(குபூஸ்)– இது ஊரில் கிடைப்பது அரிது அதனால் மெலிதாக சப்பாத்தி உருட்டி கொள்ளவும்
 சப்பாத்தி  மெலிதாக மெருதுவாக இருக்க வேண்டும்.



போன்லெஸ் சிக்கன்- 250 கிராம்
தயிர் – அரை கப்
ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் -1 மேசை கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
Paprika powder (சிவப்பு மிளகு) கொஞ்சம் (கடையில் கிடைத்தால் மட்டும்)

ஷவர்மா சாஸ் செய்ய :
வெள்ளை எள் – ஐம்பது கிராம்
தயிர் – ஐம்பது மில்லி
பூண்டு. விழுது – அரை தேக்கரண்டி
எலுமிச்சை – இரண்டு மேசை கரண்டி
ஆலிவ் ஆயில் – முன்று தேக்கரண்டி
பார்ஸ்லி இலைகள் –நறுக்கியது கொஞ்சம்
உப்பு – தேவைக்கு
வெள்ளை மிளகு தூள் – அரை தேக்கரண்டி
ஃபிரஞ்ச் ஃபிரைஸ் தேவைக்கு
வெள்ளரி – வினிகரில் ஊற வைத்தது


ஷவர்மா சாஸ் செய்முறை –
பூண்டுடன் எள்,தயிர் சேர்த்து அரைத்து அத்துடன் உப்பு,வெள்ளை மிளகு தூள், பார்ஸ்லி இலைகள்,எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் சேர்த்து மிக்ஸ் பண்ணிக் கொள்ளவும்...
செய்முறை:
சிக்கனை கழுவி, சிறு சிறு ஸ்ட்ரிப்புகளாக கட் பண்ணி, தயிர், மிளகு தூள், உப்பு, ஆலிவ் ஆயில், ஏலக்காய் தூள்,paprika (சிவப்பு மிளகு )தூள், இவைகளுடன் சேர்த்து பிரிட்ஜில் நான்கு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பிறகு இதை ஓவனில் கிரில் செய்து கொள்ளலாம். ஓவன் இல்லையெனில் தவ்வாவில் போட்டு நல்ல வறுத்து கொள்ளுங்கள்.
பிரென்ச் பிரைஸ்...உருளைக் கிழங்கை நீளவாக்கில் ஸ்ட்ரிப்புகளாக வெட்டி. கொஞ்சம் நேரம் உப்பு நீரில் ஊற்றி வைத்து பொரித்து வைத்து கொள்ளவேண்டியது.
வெள்ளரிக்காயை நீள வாக்கில் சிறு துண்டுகளாக வெட்டி வினிகரில் ஊற வைத்துக் கொள்ளவும் ...
குபூஸை நடுவில் இரண்டாக பிரித்து தவாவில் சூடு பண்ணிக் கொள்ளவும் அதில் ஷவர்மா சாஸ் நன்கு தடவி, அதில்
வறுத்த சிக்கன் சிறு சிறு துண்டுகளை பரப்பி,வினிகரில் ஊற வைத்த வெள்ளரிக்காய் துண்டுகள் 2,3 வைத்து, அதனுடன் கொஞ்சம் ஃபிரஞ்ச் ஃபிரைஸ் நடுவில் வைத்து, கொஞ்சம் தக்காளி சாஸ், சில்லி சாஸ்,மையோனைஸ் இவற்றையும் அதில் வைத்து ரொட்டியை ரோல் செய்தால். நைஸ், ருசி மிகுந்த ஸ்வர்மா ரெடி ...

குபுஸ் செய்முறை

தேவையானபொருள்கள்

மைதா                     -      3 கப்,
கோதுமை மாவு   -1/2 கப்
ஈஸ்ட் - சிறிதளவு (ஒரு பின்ச் )
சர்க்கரை                   -      2 தேக்கரண்டி
உப்பு                       -      தேவைக்கேற்ப,
சூடான பால்    - 1/2 டம்ளர்
பட்டர் (வெண்ணை ) 50 கிராம்

செய்முறை

சூடான தண்ணிரில் உப்பு சர்க்கரை சூடான பால் ஈஸ்ட் பட்டர் (வெண்ணை உருக்கி போடவும்) நன்றாக கலக்கி பின்  கோதுமை மற்றும் மைதா வை இந்த கலவையுடன் நன்றாக கலக்கவும்
மாவு கையில் ஒட்டாமல் இருக்க  ஒரு கட்டை கரண்டியை வைத்து கலக்குங்கள்
நல்ல தளர்வாக குழைத்து பின் முன்று மணி நேரம் வைத்து பின் சப்பாத்தி போல்  (பிறை பேனில் ) fry pan ல்   சுட்டு எடுக்கவும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக