சனி, 27 ஜூன், 2015

சைமாடெக்ஸ் சாயப்பட்டறை வருவதை தடுத்து நிறுத்த கோரிக்கை


பரங்கிப்பேட்டை:பெரியப்பட்டில் சைமாடெக்ஸ் சாயப்பட்டறை கம்பெனி வருவதை தடுத்து நிறுத்த கலெக்டருக்கு, அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.பரங்கிப்பேட்டை அடுத்த பெரியப்பட்டில் உள்ள சைமாடெக்ஸ் சாயப்பட்டறை கம்பெனி வருவதால் பெரியப்பட்டு, பெரியாண்டிக்குழி, தச்சம்பாளையம், நயினாக்குப்பம், சின்ணாண்டிகுழி, வாண்டியம்பள்ளம், ஆண்டாள்முள்ளிப்பள்ளம், கோபாலபுரம், மடவாப்பள்ளம், சாமியார்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்த கம்பெனியின் கழிவு நீர் கடலில் கொண்டு விடுவதால், கடலூரில் இருந்து புதுப்பட்டினம் வரை உள்ள கடல் பகுதியில் மீன் வளமும், மீனவர்களின் மீன்பிடி தொழிலும் கடுமையாக பாதிக்கப்படும். இப்படி பல தரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதால், பொதுமக்கள் நலன் கருதி சைமா டெக்ஸ் சாயப்பட்டரை கம்பெனி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக