வெள்ளி, 27 மார்ச், 2015

கீழே கிடந்த பணத்தை ஒப்படைத்த இளைஞர்களுக்கு போலீஸ் பாராட்டு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் கீழே கிடந்த 8,000 ரூபாயை எடுத்து வந்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த 2 இளைஞர்களின் நேர்மையை இன்ஸ்பெக்டர் பாராட்டி பரிசு வழங்கினார்.பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் கருணாகரன். மீன் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் பரங்கிப்பேட்டை ஐ.ஓ.பி., வங்கியில் 79 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து வங்கி முன் கீழே அமர்ந்து சக மீன் வியாபாரிகளுக்கு பணம் கொடுத்துள்ளார்.அதில் மீதி இருந்த 8,000 ரூபாயை அவர் கட்டியிருந்த லுங்கியில் போட்டு வைத்தார்.லுங்கியில் வைத்திருந்த பணத்தை கவனிக்காமல் எழுந்து வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது அந்த வழியாக வந்த சின்னூர் தெற்கு தெருவைச் சேர்ந்த மாத்தையா (22), தரணி (28) இருவரும் வங்கி முன் கீழே கிடந்த 8,000 ரூபாயை எடுத்து பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.இதற்கிடையே பணம் காணாமல்போனது குறித்து கருணாகரன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.இருந்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், கீழே கிடந்த இளைஞர்கள் ஒப்படைத்த பணம் கருணாகரனுடையது என தெரியவந்தது. அதையடுத்து அந்த பணம் கருணாகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும் பணத்தை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த மாத்தையா, தரணி ஆகியோரை இன்ஸ்பெக்டர் உதயகுமார் பாராட்டி பரிசு வழங்கினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக