சனி, 28 மார்ச், 2015

பரங்கிப்பேட்டை பவர் பிளாண்ட்டில் பெரும் தீ விபத்து பலகோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை பவர் பிளாண்ட்டில்   பெரும் தீ ஏற்ப்பட்டு சுமார் 5கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியது

பரங்கிப்பேட்டை கரிக்குப்பம் பகுதியில்  சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்  ஐ.எல்.எப்.எஸ் பவர் கம்பெனி தனியார்  மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்று மதியம் சுமார் 2:00 மனியளவில் கூலிங் டவர்  எனப்படும் குளிரூட்டும் பகுதியில் தெர்மோகூல் பொருத்தி வெல்டிங் செய்யும் பணி நடைபெற்று வந்தது அப்போது திடீரென  தீப்பிடித்து மள, மளவென தீ பரவியதால், வேலை செய்து கொண்டிருந்ததொழிலாளர்கள் வெளியேறினர்.  தீ விபத்தில் சுமார் பல கோடி ருபாய்   மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியது என தகவல் கள் தெரிவிகின்றன உயிர் சேதம் குறித்து இன்னும் எந்த தகவலும் உறுதி படுத்த வில்லை இருந்தும் சில பேருக்கு தீக்காயம்  ஏற்படுள்ளதாக
தகவல் இப்பெரும் தீ விபத்தினால் பரங்கிப்பேட்டை மக்கள் இடையே பெரும் அச்சமும் பரபரப்பு ஏற்பட்டது தீ ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரதிற்கு பிறகே தீ அணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது இருந்தும் பரங்கிப்பேட்டையின் ஒரே தீ அணைப்பு வாகனம்  இருந்ததால் தீ யை உடனே கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை போதிய போலிசார் இல்லாததால் பாதுகாப்பு பணியில் குறைந்த அளவிலான போலிசார்  இருந்தனர் பின்னர் சிதம்பரம் சேத்தியாத்தோப்பு,மற்றும் கடலூர் தீ அணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 7 வாகனகள் தீ அணைப்பு பணியில் இடுபடுத்த பட்டன   தீ ஏற்பட்ட பொருள் பிளாஸ்டிக் ரசாயனம் என்பதால் முழுவதும் எறிந்துவிட்ட பிறகே தீ கட்டுக்குள் வந்தது. பவர் பிளான்ட் சுற்றி மக்கள் கூட்டம் பெரும் திரளாக காணப்பட்டது சுமார் 100 அடிக்கு மேலே தீ யின் ஜுவாலை கொழுந்து விட்டு எறிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் மேலும் பல கிலோ மீட்டார் தூரம் புகை மண்டலமாக காணப்பட்டது

updeted : இத்தீவிபத்தில் 120 கோடி மதிப்புள்ள 5 கூலிங் டவர் முற்றிலும் எரிந்து நாசமாகியது என்று அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது


உரிய பாதுகப்பு பணிகள் இல்லாததே இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் மேலும் இந்த அனல் மின் நிலைய அடிக்கடி கட்டு மான பனியின் போது பல விபத்துகள் நடந்து பல உயிர் சேதம் ஏற்பட்டது இங்கு தொடர் விபத்துகள்  வாடிக்கையாக உள்ளது   கடந்த நவம்பர் மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை,தேசிய பசுமை தீர்ப்பாயம் ஐ.எல்.எப்.எஸ் பவர் கம்பெனிக்கு அளித்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது














 
 
 
 
 
updeted : மீட்புப்பணிக்கு வந்த தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து 4 வீரர்கள் காயம்
 
கடலூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினரும் பரங்கிபேட்டை கரிக்குப்பத்துக்கு புறப்பட்டுச் வரும் வழியில்  காரைக்காடு சிப்காட் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தீயணைப்பு வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் செல்வராஜ் (52), வேல்முருகன் (40), வீரபாகு (45), குமரகுருபரன் (42) ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்
 
 

1 கருத்துகள்: