சனி, 28 மார்ச், 2015

இயல்பு வாழ்க்கையைப் சற்றே புரட்டிப் போட்ட முழுஅடைப்பு:

கடலூர் : கர்நாடக அரசின் காவிரியில் அணை கட்டும் முயற்சியினைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் முழுமையாக இருந்தது.தமிழக டெல்டா விவசாயிகளின் சார்பில் நடத்தப்படும் போராட்டம் என்பதால் ஆளும்கட்சியினரும் இதற்கு மறைமுக ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.இதனால், தமிழகம் முழுவதும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு, ப ஜ க வை தவிர மற்ற பிரதான கட்சிகள் தி.மு.க., காங்கிரஸ், கம்யூ னிஸ்டுகள் உள்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள், டிப்பர் லாரி மற்றும் மண் அள்ளும் எந்திரங்களும் ஆகியவை
ஆதரவு அளித்தன.
தமிழக சட்டசபையில் கர்நாடக அரசை கண்டித்து நேற்று முன் தினம்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு அளிக்கும் வகையில் சட்டசபை கூட்டமும் இன்று ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டது.
இன்று மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான கடைகள் ஒட்டு மொத்தமாக அடைக்கப்பட்டு இருந்தன. அனைத்து ஊர்களிலும் கடை அடைப்பு போராட்டத்துக்கு முழுமையான ஆதரவுஇருந்தது
அத்தியாவசிய மருந்துகடை, மற்றும் ஒருசில சிறிய கடைகள் தவிர அனைத்துக்கடைகளும் மூடி இருந்தன

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
சிதம்பரம் நகரில் காய்கறி மார்க்கெட், நகைகடைகள், ஜவுளிக்கடைகள், மளிகைகடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்து  அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் நகரம் வெறிச்சோடி கிடந்தது. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. ஹோட்டல்கள், டீக்கடை உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்ததால் பயணிகள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
கடலூரில் நேற்று கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. தனியார் பஸ்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த அளவே இயக்கப்பட்டன
 புவனகிரி, சேத்தியாத்தோப்பு பரங்கிப்பேட்டை பகுதிகளிலும் பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. விவசாயிகளின் கடை அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக