சனி, 13 டிசம்பர், 2014

விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலை விரிவாக்கப்பணி மார்ச் மாதம் துவங்கும்; திட்ட ஆலோசகர் தகவல்

சேத்தியாத்தோப்பு: விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலை விரிவாக்கப்பணி மார்ச் மாதம் துவங்கும் என சாலை மேம்பாட்டுத் திட்ட ஆலோசகர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
விருத்தாசலத்தில் இருந்து புவனகிரி வரை சாலை விரிவாக்கத்திற்கான ஆக்கிரமிப்பு அகற்றுவது, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் நடந்தது. மிராளூர் ஊராட்சித் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் வளையமாதேவி செல்வராஜ், கம்மாபுரம் ஊராட்சித் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் விருத்தாசலம் உதவி கோட்ட பொறியாளர் ஸ்டெல்லாமேரி நெடுஞ்சாலைத்துறை திட்ட உதவியாளர் அருணாச்சலம் தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்ட நிறுவன ஆலோசகர்கள் சந்திரசேகரன் கருணா ஆகியோர் சாலை விரிவாக்கம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நிலம் கையகப்படுத்துவது, இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்து பேசினர்.கூட்டத்தில் சாலையோர வீடுகளில் வசிப்பவர்கள் கடை வைத்திருப்பவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, சாலை மேம்பாட்டுத் திட்ட ஆலோசகர் சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது: விருத்தாசலம் முதல் பரங்கிப்பேட்டை வரையிலான 35 கி.மீ., சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் 200க்கும் மேற்பட்ட கடைகள் வணிக வளாகங்கள் 150க்கும் மேற்பட்ட வீடுகள் பாதியாகவும் மதில் சுவர் கழிப்பறை ஆகியவை, 100க்கும் மேற்பட்ட இடங்களில் முழுமையாகவும் இடிக்கப்படுகிறது.இந்த இடங்களில் 333 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. சாலையோரம் உள்ள 500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகிறது. இதற்கு பதிலாக ஒரு மரத்துக்கு 10 மரக்கன்றுகளை வைத்து 3 ஆண்டுக்கு பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதேப்போன்று சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் 40 நிழற்குடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு குறித்து தணிக்கைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வரும் பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் மாதத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும். இவ்வாறு சந்திரசேகரன் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக