வியாழன், 11 டிசம்பர், 2014

டிச-15 முதல் குடும்ப அட்டை புதுப்பிக்கும் பணி: ஆட்சியர் தகவல்

கடலூர் :கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 15-ம் தேதி முதல் குடும்ப அட்டை புதுப்பிக்கும் பணி தொடங்கும் என ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 31.12.2015 வரையில் நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
 அதன்படி, குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி நியாய விலைக் கடைகளில் டிசம்பர் 15-ம் தேதி முதல் அனைத்து வேலை நாள்களில்
நடைபெற உள்ளது.
 குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையை எடுத்துச் சென்று 2015-ம் ஆண்டுக்கான உள்தாளை இணைத்துக் கொள்ளலாம். இதற்காக, வழங்கல் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். அப்போது, தான் பதிவு புதுப்பித்ததாக கருதப்படும்.
 கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப அட்டைகளை புதுப்பிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விவரம் அந்தந்த நியாய விலைக் கடைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.
 எனவே, பொதுமக்கள் தங்களுக்குரிய நாளில் குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக