பரங்கிப்பேட்டை:சிதம்பரத்திலிருந்து சி.முட்லூர் வழியாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் பு.முட்லூரில் இருந்து கடவாச்சேரி வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம்- பு.முட்லூர் சாலையில் அரசு கலைக்கல்லூரி, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் கல்லூரி மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதன் இடையே ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில் சிதம்பரத்தில் இருந்து சி.முட்லூர் வரை சில பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். கல்லூரி மாணவர்களுக்கே இடம் பற்றாக்குறையாக உள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பஸ்சில் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர்.
சிதம்பரம்-பரங்கிப்பேட்டை, சிதம்பரம்-புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் போல் சிதம்பரம்-பு.முட்லூருக்கு சி.முட்லூர் வழியாக அதிகளவில் அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக