திங்கள், 24 நவம்பர், 2014

பைக் மீது கார் மோதிய விபத்து வாலிபர் சாவு: பெண் படுகாயம்


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். இளம்பெண் படுகாயமடைந்தார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம், சின்ன முதலியார் சாவடியை சேர்ந்தவர் வினோத் (23). இவரும் புதுச்சேரி தந்தை பெரியார் நகரை சேர்ந்த சண்முகப்பிரியாவும் (17) நேற்று முன்தினம் யமகா பைக்கில் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு சென்றனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே சென்றபோது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த டெயோட்டா எத்தியோஸ் கார், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் வினோத், சண்முகப்பிரியா இருவரும் படுகாயமடைந்தனர். உடன் அவர்கள் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே வினோத் இறந்தார். சண்முகப்பிரியா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வினோத் உறவினர் புகழேந்தி கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக