திங்கள், 24 நவம்பர், 2014

சவூதியில் ரியாத் மற்றும் ஜித்தா பகுதிகளில் கனமழை (படங்கள்)

ரியாத் : கடந்த வெள்ளி இரவு மற்றும் சனிக்கிழமை  சவூதியின் வணிக நகரான ஜித்தா பகுதிகளில் கன மழை பெய்தது இதனை தொடர்ந்து தலைநகர் ரியாத்திலும் கனமழை பெய்தது இக்கன மழையினால் நகரங்கள் ஸ்தம்பித்தது
வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை காலை வரை ஜித்தா  பகுதிகளில் இடி மின்னலுடன் கடும் மழை பெய்தது பல பகுதிகள் மற்றும் பிரதான சாலைகள் முழுவதும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது















 
 
 
இதேபோல் நேற்று ஞாயிறு   தலைநகர் ரியாத்திலும் இடி மின்னலுடன் கடும் மழை பெய்தது தொடர்ந்து பெய்துவரும் மழையால் முக்கிய வீதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
கன மழையால் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சுழ்ந்துள்ளது  இம் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது நகராட்சியும், சிவில் பாதுகாப்பு மீட்பு படை மற்றும்
சவுதி செம்பிறைச்சங்கம்  வெள்ளம் வடிகால் பணிகளில் மற்றும் மீட்பு உதவி களில் ஈடுபட்டுள்ளனர்










0 கருத்துகள்:

கருத்துரையிடுக