திங்கள், 10 நவம்பர், 2014

துபாய் மெட்ரோவை தொடர்ந்து துபாயை கலக்க வரும் டிராம் வண்டிகள்

துபாய்:துபாய் மெட்ரோ ரயில்,மற்றும்  துபாய் மோன ரயில் அதனை தொர்ந்து தற்போது பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் நவீன‌ டிராம் வண்டிகள்  நாளை  11ம் திகதி முதல் செயற்படவுள்ளன.இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள டிராம் வண்டிகளின் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.
பிரான்சில் உள்ள அல்ஸ்டாம் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த டிராம் வண்டிகள் ஓட்டத்தில் மாறுபட்ட வேகங்கள், பாதுகாப்பு அம்சங்கள், வண்டிகளின் உந்துவிசை, பிரேக், அவசர நிறுத்தங்கள், கதவுகளின் இயக்கம், வண்டியின் சக்தி போன்ற அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன.
துபாய் அரச அதிகாரிகளின் கண்காணிப்பில் டிராம் வண்டிகளின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.



முதல்கட்டமாக 11 நிலையங்களின் வழியாக 10.6 கிலோ மீட்டர் தூரம் வரை டிராம் பாதைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு வழித்தடத்தில் 11 டிராம்கள் இயக்கப்பட உள்ளது.
44 மீட்டர் நீளமும் 3.5 மீட்டர் உயரமும் கொண்ட இந்த டிராம் வாகனம் சராசரியாக மணிக்கு 21.44 கிலோமீட்டர் வேகத்திலும் அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
405 பயணிகள் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு காலை 5.30லிருந்து நள்ளிரவு 12 மணிவரை இயக்கபட உள்ளது. மேலும் ப‌டி படியாக 14.5 கிலோமீட்டார் தூரம் வரை ரயில் பாதையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டிராம் வண்டியில் ஏழு பெட்டிகள் இணைக்கப்பட்டு ஒரு கோல்ட் சூட், நான்கு பெட்டிகள் சில்வர் கிளாஸ் என்ற இரண்டு வகுப்புகளுடன், இரண்டு பெட்டிகள் குழந்தைகள் மகளிருக்கென தனி வகுப்பும் இதில் இருக்கும். வண்டிகளின் உட்புறங்களும், நிறுத்தங்களும் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டு பயணிகளை கவரும் வகையில் டிராம் அமைந்திருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக