சனி, 8 நவம்பர், 2014

பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் ஏற்பாடு செய்த “ டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் முஹம்மதியா ஷாதி மஹாலில் சிறப்பாக நடந்தது. இதில் பரங்கிப்பேட்டையை  சார்ந்த அனைத்து சமுகத்தினர்களும் திரளாக கலந்துக் கொண்டார்கள்.
மொளவி அல்ஹாஜ் ஜனாப் M.H. அஹம்மது கபீர் மதனி அவர்கள் கிராத் ஓதி கருத்தரங்கதை  ஆரம்பித்து வைத்தார்கள். ஜமாஅத்
தலைவர் கேப்டன். ஹமீது அப்துல் காதர் தலைமை ஏற்று பேசினார்  அடுத்து  பொது சுகாதாரம் மற்றும் மருந்து தடுப்பு துரையின்அதிகாரிகள்  திரு. இருதயராஜ், டாக்டர் சுகன்யா, திரு பிரேம் குமார் மற்றும் தொண்டு அமைப்பிலிருந்து திரு இளங்கோ அவர்களும் டெங்கு கொசுவைப் பற்றியும், அது பரப்பும் விதம், நோய்களுக்கான அறிகுறிகள், அதை தடுக்கும் வழிமுறைகள், மருந்துக்கள் பற்றிய விபரங்கள், பரிசோதனை செய்யும் முறைகள், மற்றும் பொது மக்களுக்கான அறிவுரைகளை மிக தெளிவாக செயல் முறை விளக்கம்,எடுத்துரைத்தார்கள்.
பின்னர் பொது மக்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளித்தனர் .
மேலும் பொதுமக்களுக்கு, உயிருடன் உள்ள டெங்கு கொசுவையும், அதன் முட்டைகளையும் அது வளரும் விதத்தையும் விளக்கி காட்டினார்கள்.

ஜமாத்தின் சார்பாக அரசினர் மருத்துவ மனையிலிருந்து பெறப்பட்ட சித்த மருந்து எல்லா பெண்களுக்கும் கொடுக்கப் பட்டது. மருந்து கிடைக்காதவர்களை அரசினர் மருத்துவ மனையிலில் இலவசமாக பெற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப் பட்டது.
 
நிறைவாக டெங்கு கொசுவை ஒழிப்பதற்கான உறுதி மொழியை ஊர் பொது மக்கள் அனைவர்களும் எடுத்துக் கொண்டனர் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக