சனி, 1 நவம்பர், 2014

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது ஸ்வீடன்

ஸ்டாக்ஹோம்:பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது ஸ்வீடன். இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக ஐ.நா. அங்கீகரித்ததைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் பாலஸ் தீனத்துக்கு அங்கீகாரம் அளித்து வருகின்றன. இப்போது ஸ்வீடன் இந்த நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது.
பாலஸ்தீன மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையை பெற தாங்கள் அளித்துள்ள அங்கீகாரம் உதவும் என்று ஸ்வீடன் கூறியுள்ளது. ஸ்வீடனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள இஸ்ரேல், அந்நாட்டில் இருந்து தங்கள் தூதரை வாபஸ் பெற்றது. இஸ்ரேலில் உள்ள ஸ்வீடன் தூதரை அழைத்து கடும் கண்டன மும் தெரிவித்தது.
ஸ்வீடனின் இந்த நடவடிக்கை அவசரகதியில் மேற்கொள்ளப் பட்டது என்று அமெரிக்கா விமர்சித் துள்ளது.
ஸ்வீடனின் முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துணிச் சலான முடிவு என பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக