கடலுார்: 2015ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து அரசு தேர்வுகள் மண்டல இயக்குனரின் செயலர் ஆசீர்வாதம் விடுத்துள்ள
செய்திக்குறிப்பு:
2015ம் ஆண்டில் நடைபெறவுள்ள எஸ்.எல்.எல்.சி., பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள், வரும் 7ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அன்று பதினான்கரை வயது பூர்த்தியாகி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவியரும், 9ம் வகுப்பு பயின்று இடையில் நின்றவர்களும் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கல்வி காப்புறுதித் திட்டத்தின் கீழ் பயின்று 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், உண்டு உறைவிடப் பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி, பள்ளிசாரா கல்வித் திட்டத்தில் 8ம் வகுப்பு சான்றிதழ், திறந்தவெளிப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக