பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் சுமார் 10,000 ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ள சம்பா நெல்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தப் பகுதிகளை சிதம்பரம் எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள மேட்டுக்குப்பம், தட்சக்காடு, வல்லம், மணல்மேடு, சேந்திரகிள்ளை உள்ளிட்ட 25-க்கும்
மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10,000 ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். இங்கு பெய்த பலத்த மழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
மழை பெய்து 3 நாள்களுக்கு மேலாகியும் நீர் வடியவில்லை. மழை நீர் வடிய போதிய வடிகால் வசதி இல்லாததும், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கி இருப்பதாலும் நெல் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் மேற்கண்ட கிராமங்களுக்கு நேரில் சென்று நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் விபரம் கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள், நீரில் மூழ்கியுள்ள நெல் கதிர்களை எடுத்து எம்எல்ஏவிடம் வேதனையுடன் காண்பித்தனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக விவசாயிகளிடம் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நடவடிக்கை இல்லை:
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் மழை நீர் வடிவதில் பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2011-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளை இந்த இடத்திற்கு அழைத்து வந்து இங்குள்ள நிலைமையை விவசாயிகளுடன் சேர்ந்து விளக்கிக் கூறினேன். மேலும், இந்தப் பகுதியில் மழைக்காலங்களில் தேங்கும் நீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஆனால் இன்று வரை எந்தப் பணியும் நடைபெறவில்லை. வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை மாவட்ட ஆட்சியரோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இன்று வரை நேரில் சென்று பார்க்கவில்லை.
தற்போது விவசாயிகள் மூன்றாவது முறையாக நடவு செய்துள்ள நெல் பயிரும் நீரில் முழ்கியுள்ளது. இதிலிருந்து விவசாயிகள் மீள ஏக்கருக்கு ரூ.15,000 இழப்பீடு வழங்குவதுடன், சாகுபடிக்கு தேவையான இடுபொருள்களையும் உடனே கிடைக்க அதிகாரிகள் வழி வகை செய்யவேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக