வெள்ளி, 31 அக்டோபர், 2014

இந்திய தொலைதொடர்பு துறையில் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


கடலூர்: இந்திய தொலைதொடர்பு துறையில் காலியாக உள்ள இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்திய தொலைதொடர்பு துறையின் திட்டப்பணிகளுக்கு எலக்ட்ரானிக், டெலிகாம் பிரிவில் பி.இ., பி.டெக் தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு அனுபவத்துடன் 35 வயதிற்குட்பட்ட எப்.டி.டி.ஹெச் இன்ஜியர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணி தொடர்பில், திட்டமிடுதல், வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஆட்டோ கார்டு போன்றவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குவைத் நாட்டின் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற 50 வயதிற்குட்பட்ட ஓட்டுனர்கள் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இருப்பிடம், உணவுப்படி மற்றும் குவைத் நாட்டின் சட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விருப்பமும், தகுதியும் இருப்பின் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஒரு புகைப்படம் ஆகியவற்றுடன் எண் 42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க., தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 32 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு நேரிலோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 044-22502267 என்ற தொலை பேசி எண்கள் மூலமாக அல்லது இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக