கடலூர்:அந்தமான் அருகே புயல் உருவாகி உள்ளதால் கடலூரில் நேற்று கடல் உள்வாங்கியது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விருத்தாசலம், பண்ருட்டி, மேமாத்தூர், குப்பநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 16 மி.மீட்டர் மழை பதிவானது. இதற்கிடையே அந்தமான் அருகே ‘ஹூட் ஹூட்’ புயல் உருவாகி உள்ளது. இப்புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடலூரில் நேற்று கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதுபற்றி கடலூர் முதுநகரைச்சேர்ந்த மீனவர் எஸ்.நாகலிங்கம் கூறுகையில், அந்தமான் அருகே புயல் உருவாகி இருப்பதால் இன்று(அதாவது நேற்று) கடல் வழக்கத்துக்கு மாறாக அதிக சீற்றத்துடன் இருந்தது, இதனால் மீன் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினார்கள் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக