வெள்ளி, 17 அக்டோபர், 2014

பரங்கிப்பேட்டையில் ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது: மீனவர் கதி என்ன?

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையை அடுத்த சின்னூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 40). அதே பகுதியில் வசிப்பவர்கள் அண்ணாதுரை, முருகன், கலையரசன்.
பரங்கிப்பேட்டை பகுதியில் இன்று கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. எனினும் இவர்கள் 4 பேரும் காலையில் மீன்பிடிக்க பைபர் படகில் கடலுக்கு சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்த போது ராட்சத அலை ஒன்று எழும்பி வந்தது. அது அந்த படகை வாரிச்சுருட்டி கவிழ்த்தது. இதில் 4 மீனவர்களும் கடலில் மூழ்கினர். ஆனால் அண்ணாதுரை, முருகன்,
கலையரசன் ஆகியோர் நீந்நி கரையேறிவிட்டனர். கடலில் மூழ்கிய சுகுமாரின் கதி என்ன? என தெரியவில்லை.
இதுபற்றி பரங்கிப்பேட்டை போலீசில் மீனவர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் கடலில் மூழ்கிய சுகுமாரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


 கடலில்  மாயமான  சுகுமாறன்
 போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கடலில் நீந்த முடியாமல் தத்தளித்த சுகுமாறன் நீரில் மூழ்கி இறந்து போனாரா? அல்லது வேறு எங்காவது நீந்தி கரை சேர்ந்தாரா?, அவரது கதி என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. நடுக்கடலில் படகு கவிழந்து மீனவர் மாயமான சம்பவம் பரங்கிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக