ஞாயிறு, 26 அக்டோபர், 2014

கடலூர் பாஸ்போர்ட் சேவை மையம் மூடல்:ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்


கடலூர்:கடலூரில் இயங்கி வந்த பாஸ்போர்ட் சேவை மையம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால், இனி ஆன் லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கடலூரில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் மாவட்ட பாஸ்போர்ட் சேவை மையம் இயங்கி வந்தது. இந்நிலையில் மத்திய அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், தற்போது சென்னையில் மட்டும் மூன்று மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.புதிய பாஸ்போர்ட் திட்டத்தில், விண்ணப்பதாரரின் கைரேகை "பயோ மெட்ரிக்' முறையில் பதிவு செய்து பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூரில் இயங்கி வந்த மாவட்ட பாஸ்போர்ட் சேவை மையம் கடந்த 20ம் தேதி மூடப்பட்டு விட்டது.
எனவே, மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் பெற "ஆன் லைன்' மூலம் விண்ணப்பித்து விட்டு< சென்னையில் உள்ள பாஸ்போர்ட் மையங்களை நேரில் அணுக வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக