பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் சார்பில் கட்டப்பட்டு வரும் கழிப்பறைபணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், சின்னூர் புதுப்பேட்டை ஊராட்சியில் உள்ள கரிகுப்பம் கிராமத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.15,000 மதிப்பீட்டில் கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கழிப்பறை தரமற்று கட்டப்படுவதாகவும், அதில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் கே.பாலகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை சம்பந்தப்பட்ட கிராமத்துக்குச் சென்று கழிப்பறை கட்டும் பணியை ஆய்வு செய்தார்.
ஆய்வில் தரமற்ற ஹாலோ பிளாக் என்ற கருங்கல் சிப்ஸ் கொண்டு கழிப்பறை சுற்றுச்சுவர் கட்டப்படுவதாகவும், அடித்தளம் தோண்டாமல் சுவர் எழுப்பப்படுவதாகவும் கூறி இப் பணியை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் எம்எல்ஏவிடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரை, கே.பாலகிருஷ்ணன் செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டறிந்தார்.
பின்னர் தரமற்றதாக கட்டப்படும் கழிப்பறை கட்டுமானப் பணியை நிறுத்த வேண்டும் என எல்எல்ஏ அதிகாரியிடம் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, கரிக்குப்பம் கிளைச் செயலர் பரமானந்தம், வாலிபர் சங்க ஒன்றியச் செயலர் காந்தி, தலைவர் அன்பரசு, மாதர் சங்க கிளை செயலர் புஷ்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
photo :file

0 கருத்துகள்:
கருத்துரையிடுக