வியாழன், 2 அக்டோபர், 2014

பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்


கடலூர்: வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சுரேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை தடுக்கும் பொருட்டும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டும், பிளாஸ்டிக் கழிவுகள் (நிர்வகித்தல் மற்றும் கையாளுதல்) விதிகள் 2011ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்திய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
வணிகர்கள் மற்றும் பொதுமக்கள், விற்பனையாளர், பெட்டிக்கடைக்காரர், சில்லரை வணிகர், மொத்த விற்பனையாளர் மற்றும் அனைத்து வர்த்தகர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் உட்பட உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்களை சேகரிப்பதற்காவோ, சுமப்பதற்காவோ, வழங்குவதற்காகவோ அல்லது பொருட்களை கட்டுவதற்காகவோ பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவோ, இருப்பில் வைப்பதோ, விற்பனை செய்வதோ அல்லது எடுத்து செல்லவோ தடை செய்யப்பட்டுள்ளது. பல அடுக்கு பிளாஸ்டிக் சிறுபைகள் மீது தயாரிப்பாளர்கள் பெயர் பதிவெண் போன்றவை கண்டிப்பாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் மீது மறு சுழற்சி என அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக