கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் பெரிய தெருவைச் சேர்ந்த அலீல் ரஹ்மான் மகன்
பக்ருதீன் (22). காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த முகமது அலி மகன் சபிபுல்லா (28).
முகமது அன்சாரி மகன் சையது அலி (22). முகமது ஜலால் மகன் முகமது சுகைப் (22).
முஸ்தபா கமால் மகன் சாகிப் மரைக்காயர் ( 23).
பக்ருதீன், இன்ஜினியரிங் முடித்து விட்டு நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி ஆலையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
நண்பர்களான இவர்கள் ஐந்து பேரும் டி.என்.31.ஏஜே 6976 எண்ணுள்ள டொயாட்டோ எடியாஸ் காரில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடலுாரில் இருந்து நெல்லிக்குப்பம் சென்றனர் காரை சபிபுல்லா ஓட்டி வந்தார். நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டு அருகே சென்ற போது திடீர் பிரேக் போட்டதில் கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சபிபுல்லா, பக்ருதீன் இருவரும் இறந்தனர்.
படுகாயமடைந்த முகமது சுகைப், சாகிப் மரைக்காயர் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமவையிலும் சையது அலி கடலுார் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக