பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த சில தினங்களாக மீண்டும் 5 மணி நேர மின்வெட்டு தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த சில மாதங்களாக மின்வெட்டு இல்லாததால், பரங்கிப்பேட்டை பகுதி மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக 5 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது
கடலூர் மாவட்டத்தில் நகரப் பகுதியில் மின் தடை 5 மணி நேரமாகவும், கிராமப் புறங்களில் 7 மணி நேரமாகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் பூஜ்ஜியமாக உள்ளது. அதனால் தமிழகத்தில் 2 மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டது. மேலும் தொழிற் கூடங்களுக்கு 20 சதவீதம் மின்தடை அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மின்தடை நேரம் அதிகரித்தது. நேற்று முன்தினம் வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் அலகு பழுதடைந்துள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் நகர்புறங்களில் 5 மணி நேரமும், கிராமப்புறங்களில் 7 மணி நேரமும் மின்தடை செய்யப்பட்டு வருகின்றன.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக