பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே தனியார் சாயப்பட்டறையில் கழிவுநீர் வெளியேற்ற குழாய் பதித்ததற்கு 30 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் சாயப்பட்டறை
புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் தனியார் சாயப்பட்டறை கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த சாயப்பட்டறை அமைவதால் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சாயப்பட்டறை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
கிராம மக்கள் எதிர்ப்பு
இந்நிலையில் சாயப்பட்டறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை குழாய் வழியாக கடலில் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆலையில் இருந்து கடலுக்கு கிராமங்கள் வழியாக குழாய்கள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாண்டயாம்பள்ளம், அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, பெரியகுப்பம், சேட்டுஓடை, ஆண்டார்முள்ளிபள்ளம், காயல்பட்டு, பெரியப்பட்டு, சின்னாண்டிக்குழி, பெரியாண்டிக்குழி உள்ளிட்ட 30–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500–க்கும் அதிகமானவர்கள் நேற்று காலை தனியார் சாயப்பட்டறை அருகே திரண்டு, கழிவு நீர் குழாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தள்ளு–முள்ளு
இதனால் சாயப்பட்டறை தொழிலாளர்களுக்கும், கிராம மக்களுக்கும் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி ஆகிய போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஆகாமல் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் தள்ளு–முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சாலைமறியல்
இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பெரியப்பட்டு–கோபாலபுரம் சாலையில் பகல் 11 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ்சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
அப்போது சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். சாய பட்டறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி மாவட்ட கலெக்டர், சப்–கலெக்டரிடம் மனு கொடுக்கவேண்டும். ஆனால் பணியை தடுத்து நிறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக