சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோய்விட்டது.
இதனால் தமிழகத்தின் புதிய முதல்வராக 2வது முறையாக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவால் மீண்டும் எம்.எல்.ஏவாகவோ அல்லது முதல்வராகவோ முடியாது. ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே தவறு என்றும் ஜெயலலிதா நிரபராதிதான் என்றும் ஒரு தீர்ப்பு வந்தால் மட்டுமே அவரால் எம்.எல்.ஏ.வாகி முதல்வராக முடியும்.
அதிமுகவில் இணைந்த முன்னாள் டிஜிபி நட்ராஜ் கண்காணிப்பிலேயே இன்றைய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இனி நடைபெற உள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு என்பது நட்ராஜ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் முழு கண்காணிப்பிலேயே நடைபெறும் என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் இனி நடைபெற உள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு என்பது நட்ராஜ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் முழு கண்காணிப்பிலேயே நடைபெறும் என்றே கூறப்படுகிறது.
புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், நாளை காலை 11 மணிக்கு பதவியேற்க இருக்கிறார். அவருக்கு ஆளுநர் ரோசைய்யா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஓ. பன்னீர்செல்வத்துடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்கிறது. ஜெயலலிதா அரசில் அமைச்சரவையில் இருந்தோரில் பெரும்பாலானோர் அமைச்சர்களாக தொடருவார்கள் என்றே கூறப்படுகிறது.
முன்பு டான்சி நில வழக்கு காரணமாக, உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று கடந்த 2001 ஆம் ஆண்டு முதல்வர் பதவியை ஜெயலலிதா ராஜிநாமா செய்த போது, அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன்பிறகு டான்சி வழக்கில் தண்டனை ரத்து செய்யப்பட்டதால், ஜெயலலிதா ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2002ம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக