கடலூர்:கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை, வெளியூர் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில்
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் மறியல், உருவபொம்மை எரிப்பு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கல்வீச்சு, கடைகள் உடைப்பு போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 2-வது நாளாக மாவட்டத்தில் பதற்றமான நிலை நீடித்தது. கடலூர் தூக்கனாம்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுப்புற கிராமங்களில் கடைகள் அடைப்பு மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையே மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.
காலை 10 மணி முதல் ஒரு சில இடங்களில் காய்கறி கடைகள், மளிகை, மருந்தகங்கள் திறக்கப்பட்டன. உள்ளூர் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பிற்பகலில் குறைந்த எண்ணிக்கையில் வெளியூர் பேருந்துகள் இயங்கப்பட்டன. குறைந்த அளவிலான பயணிகளே இருந்தனர். பதற்றமான பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை
காலை 8:00 மணிக்கு பிறகு மாவட்டத்தின் முக்கிய நகரப் பகுதிகளுக்கும், சென்னைக்கும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் சொற்ப அளவில் இயக்கப்பட்டன. கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான அரசு பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் ஒன்றுகூட இயக்கப்படவில்லை. இதனால், அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பஸ் போக்குவரத்து முடங்கியதால் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக