செவ்வாய், 9 செப்டம்பர், 2014

வரலாறு காணாத ஜம்மு காஷ்மீர் வெள்ளம் 200 பேர் பலி 4 லட்சம் பேர் சிக்கித் தவிப்பு

ஜம்மு :ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கு காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.வரலாறு காணாத வெள்ள பாதிப்பு பகுதியில், முப்படையினருடன் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து நடத்திய மீட்புப் பணியில் இதுவரை 25,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 4 லட்சம் பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பெருவெள்ளத்தின் தாக்கத்தில் பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், இடைவிடாமல் 24 மணி நேரமும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்ப்போது ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் மீட்புப் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மட்டும் 4 லட்சம் பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஜம்முவை பொருத்தவரை ஒரு சில இடங்களில் வெள்ளம் வடிந்துவிட்டதால் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இப்போது அங்கு நிவாரண முகாம்கள் அமைப்பதில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர இரவோடு இரவாக நிவாரணப் பொருட்களும், குடிதண்ணீர், மருந்து உள்ளிட்ட பொருட்களும் ஹெலிகாப்ட மூலம் பெருமளவில் அனுப்பப்பட்டுள்ளன.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக