பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் கூட்டமைப்பினர், வெள்ளிக்கிழமை 2ஆவது நாளாக தொடர் தர்னாவில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய துறைகளைத் தவிர, மற்ற அனைத்துத் துறை வகுப்புகளுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுதிகளை காலி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் செலுத்தக் கூடிய எந்தவித கல்வி கட்டணத்துக்கும் அபராதம் கிடையாது என்ற அரசாணையை நிறைவேற்ற வேண்டும், தமிழக அரசு வழங்கியுள்ள ரூ.48 கோடி தொகையை உடனே தலித் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் வளர்மதி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் கலை, அறிவியல், வேளாண்மை, பொறியியல் புல பிரிவு மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை முதல் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பல்கலை. வருவாய் அலுவலர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கலைப்புல முதல்வர் ராஜேந்திரன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கல்வி கட்டணத்துக்கு அபராதம் விதிப்பதை நிறுத்துவது, படிப்படியாக நிதி பெற்று கல்வி உதவித் தொகை வழங்குவது உள்ளிட்டவற்றை நிறைவேற்றித் தருவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும், அரசு சலுகைகள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 62 கோரிக்கைகளை முன் வைத்ததால் பேச்சுவார்த்தை முறிவுற்றது.
இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு தொடர் தர்னாவில் ஈடுபட்டனர்.
பின்னர் வெள்ளிக்கிழமை காலை மாணவ, மாணவிகள் அங்கிருந்து புறப்பட்டு ராஜேந்திரன் சிலை அருகே உள்ள பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு சாலையில் அமர்ந்து 2 ஆவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வட்டாட்சியர் ஜி.அன்புச்செல்வி போராட்டப் பகுதியில் முகாமிட்டு நிலைமைகளை கண்காணித்து வருகிறார்.
பல்கலை.க்கு விடுமுறை: மருத்துவம், பல் மருத்துவம் துறைகளைத் தவிர மற்ற அனைத்துத்துறை வகுப்புகளுக்கும் மறுஅறிவிப்பு வரை விடுமுறை அளித்து பல்கலை. நிர்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
விடுதிகளை காலி செய்ய உத்தரவு: மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய துறைகளைத் தவிர, மற்ற துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதிகளை காலி செய்யுமாறு பல்கலை. நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக