கடலூர்: தமிழகத்தில் காற்றாலையை நம்பியே வேறு மின் திட்டங்களில் கவனம் செலுத்தாத அரசு தற்போது காற்றாலை கைவிட்ட நிலையில் தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு தலை தூக்கியுள்ளது காற்றாலை மின் உற்பத்தி சரிவடைந்ததால் கடலூர் மாவட்டத்தில் மீண்டும் மின்வெட்டு தலைதூக்கியுள்ளது. தமிழகத்தில் மின் தேவை 12 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது. அதில் காற்றாலை மூலம் 4,000 மெகாவாட் கிடைத்து வந்தன. இதனால் தமிழகத்தில் மின்தடை நீங்கி இருந்தது
காற்றாலையின் "பீக் லோடு' ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களாகும். அதாவது ஆடி மாதம்
முடிந்து ஆவணி மாதம் துவங்கிவிட்டதால் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து
வருகிறது. அத்துடன் பகலில் சுட்டெறிக்கும் வெயில் காரணமாக மின்தேவை சற்று
அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியாகும் மின்சாரத்தை விட ஆயிரம் மெகாவாட்
பற்றாக்குறை உள்ளது. இதனால் மீண்டும் மின்தடை தலைதூக்கியுள்ளது. கடலூர்
மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் பகலில் 2:30 மணி நேரமும், கிராமப்புறத்தில் 4:00 மணி
நேரமும், இரவு நேரத்தில் கிராமப்புறத்தில் 2 மணி நேரமும் மின்நிறுத்தம்
செய்யப்படுகிறது.










0 கருத்துகள்:
கருத்துரையிடுக