சிதம்பரம் :கடலூர் மாவட்டத்தில் காவல்துறையினரின் மெத்தன போக்கால் பாலியல் வன்கொடுமைகள், பலாத்கார கொலைகள் சமீப காலமாக அதிகரித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கடலூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து, சமிபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது, பதில் அறிக்கையில் கடந்த ஆண்டை விட தமிழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளது, பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என சுட்டி காட்டப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் அடுத்தடுத்த சம்பவங்களை பார்த்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் திட்டக்குடியில் 7-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் இரு மாணவிகளை கடத்தி சென்று இரண்டு மாதங்களுக்கு மேலாக வைத்து அவர்களை விபசார தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். இதில் பலபேர் சம்மந்தப்பட்டுள்ளனர், இப்படிப்பட்ட மோசமான சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
இது குறித்து அந்த மாணவிகளின் பெற்றோர்கள் ஜூன் 10-ம் தேதி புகார் கொடுத்தும் அதன் மீது வழக்கு பதிவு செய்யவில்லை, ரசீதும் கொடுக்கவில்லை. இரண்டு மாதம் கழித்து ஆகஸ்ட் 5-ம் தேதிதான் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படிப்பட்ட மோசமான சீரழிவு சம்பவங்கள் நடந்திருக்காது. இச்சம்பவத்திற்கு பின்னால் சங்கிலி தொடர் போல் பெரிய பின்னணி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கிள்ளை எம்.ஜி.ஆர் திட்டு பகுதியில் சீர்காழியிலிருந்து கடத்தி வரப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கிடந்த 13 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. புதுச்சத்திரம் பெத்தனாங்குப்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமி 4 இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாண படம் எடுத்து நண்பர்களின் செல்போனில் உலாவ விட்டுள்ளனர். விருத்தாசலம் மணிமுத்தாற்றில் சுகந்தி என்ற பெண்ணை 11-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஊமங்களம் கற்பகம் என்ற மாற்று திறனாளி பெண் பலாத்காரம் செய்யபட்டுள்ளார். சங்கொலிக்குப்பம் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசபடம் காட்டி ஆசிரியர் ஒருவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
பெண்கள் காணாமல் போனதாக புகார் அளித்தவுடன் அந்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்தாலே இது போன்ற சம்பவங்களை நடைபெறாமல் தடுக்கலாம், திட்டக்குடி மாணவிகள் சம்பவத்தில் ஆளும் கட்சியினரும் சம்மந்தப்பட்டுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்படிப்பட்ட சமூக விரோதிகளின் செயல்பாட்டல் அந்த பெண்களின் குடும்பத்திற்கு சொல்ல முடியாத அளவிற்கு அவமானம், இழப்பு ஏற்பட்டுள்ளன. இந்த சமபவத்தின் பின்னனியில் இதுவரை 21 பேரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் குற்றவாளிகள் அரசியல், பண பின்புலத்துடன் சுற்றி வருகின்றனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தின் மூலம் விரைவாக தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இச்சம்பவத்தில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த குற்றவாளிகள் கைது செய்யப்ப்டடுள்ள நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரனைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியர்களின் குடும்பத்திற்கு முதல் கட்டமாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காவல்துறை இந்த வழக்குகளில் மெத்தன போக்கை கடைபிடித்தால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தும் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார். பேடட்டியின் போது மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எம்.மருதவாணன், பி.கற்பணைசெல்வம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வி.மேரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பாதிக்கப்பட்ட திட்டக்குடி மாணவியர்களின் உறவினர்களுடன் சென்று கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராதிகாவை சந்தித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அணைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என புகார் தெரிவித்தார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக