சென்னை :தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தல் அடுத்த மாதம் 18–ந்தேதி நடக்கிறது. இதனுடன் கடலூர் உட்பட 8 நகராட்சி தலைவர் பதவிக்கும், சில உள்ளாட்சி பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கோவை மாநகராட்சி காலியாக உள்ள 3 மேயர், கடலூர், விருத்தாசலம், ராமநாதபுரம், சங்கரன்கோவில், கொடைக்கானல், புதுக்கோட்டை, குன்னூர், அரக்கோணம் ஆகிய 8 நகராட்சியிலும் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர், ஊராட்சித் தலைவர் உள்பட அனைத்து பதவிகளுக்கும் மற்றும் 1,000 வார்டு உறுப்பினர் பதவிகளுக்களுக்கும் இடைத்தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, தேர்தல் ஏற்கனவே அறிவித்த அதே செப்டம்பர் 18ம் தேதி நடத்தப்படுகிறது.
அதன்படி வேட்பு மனு தாக்கல் இன்றே துவங்கி, செப்டம்பர் 4ம் தேதி முடிகிறது. அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 22ம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக