வெள்ளி, 4 ஜூலை, 2014

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பு இருக்க சீன அரசு தடை !!

பெய்ஜிங்:உலகெங்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்லாமியர்களுக்கான ரமலான் புனித நோன்பு ஆரம்பமானது.இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். ஆனால் சீனாவில் வடமேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு வைக்க சீன அரசு தடை விதித்து உள்ளது.
சீவடமேற்கு சின்ஜியாங் பகுதியில் உள்ள பள்ளிகள் , அரசு அலுவலகங்களுக்கு ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.இது குறித்து இணைய தளங்கள்- வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நோன்பு மற்றும் பிற மத நடவடிக்கைகளில் பங்கேற்க கூடாது என உத்தரவிட்டு உள்ளது.
சின்ஜியாங் மாகாணத்தின் உள்ளூர் நிர்வாகம் அரசு ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி ஏற்கனவே இஸ்லாமிய மக்களை ரமலான் நோன்பிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் பிரிவினைவாதம் தோன்றக்கூடும் என்ற அச்சம் காரணமாக சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியும் சின்ஜியாங் அரசு நிர்வாகமும் மத நிகழ்ச்சிகளை தடை செய்வதாகக் கூறப்படுகின்றது.
கடந்த 2009ஆம் ஆண்டில் சின்ஜியாங் மாகாணத் தலைநகரில் நடந்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் முஸ்லிம்களின் நம்பிக்கைகளை சீன அரசு மேலும் பொய்யாக்கி வருகிறது..அரசியல் அடக்குமுறையை சீன அரசு நிறுத்தவேண்டும் என உய்குர் தலைமை செய்தித் தொடர்பாளர் டில்சட் ரக்சிட் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக