அமைதியான, சமாதானமான வாழ்வுக்கு எதிரான நிலைப்பாடே பயங்கரவாதமாகும்.
அமைதிக்கெதிரான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் பயங்கரவாதத்தின் வடிவங்களே. அதை குழுக்களாக செய்தாலும் சரி, தனிமனிதராக செய்தாலும் சரி ,அரசாங்கமேசெய்தாலும் சரி.
பல கட்ட விசாரணைக்கு பிறகே இது குறித்து நீதித்துறை முடிவெடுக்கும். என்றாலும் தமிழகத்தின் நாளாந்தர பத்திரிக்கைகள் சில, தங்களை நீதித்துறை அந்தஸ்த்திற்கு கற்பனை செய்துக்கொண்டு விசாரனையிலுள்ள பலரையும் குற்றவாளிகள் என்று எழுதி தீர்ப்பு வழங்கி விடுகின்றது.
சுயமாக கூடுதல் பொறுப்புணர்வுடன் இயங்க வேண்டிய பத்திரிக்கைகளில் சில பத்திரிக்கை தர்மத்தையெல்லாம் ஒரு பக்கம் தள்ளி வைத்து விட்டு கண்டவற்றையும் எழுதி வெளிப்படையான குற்றங்களை செய்து வருகின்றது.
தமிழகத்தில் இந்த வரிசையில் பல பத்திரிக்கைகளை சுட்டிக் காட்டலாம் என்றாலும் “குமுதம் ரிப்போர்டர்” என்ற பத்திரிக்கையை தற்போது அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.
பரங்கிப்பேட்டை சார்ந்த ஒருவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி காவலில் உள்ளார். விசாரணை நீதிமன்றத்தை சார்ந்ததாக உள்ளது.
ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டதால் ஏராளமான தியரிகளை உட்கொள்ளும் பத்திரிக்கைத் துறையில் சில பரங்கிப்பேட்டை வருகின்றது. விசாரித்து சில தகவல்களை வெளியிடுகின்றது.
நேரடியாக களத்திற்கு வராமல் எங்கோ உட்கார்ந்துக் கொண்டு எழுதும் வியாபாரம் செய்யும் பத்திரிக்கையான “குமுதம் ரிப்போர்ட்டர்” பரங்கிப்பேட்டையைப் பற்றி பயமுறுத்தும் தலைப்பை வெளியிட்டு ஒரு செய்தியைப் போடுகின்றது.
“பகீர் கிளப்பும் பரங்கிப்பேட்டை பின்னணியில் ஐ.எஸ்.ஐ” (படம்)
இத்தலைப்பில் செய்தி வெளியிட்ட அந்தப் பத்திரிக்கை மிக அபாண்டமான ஒரு கடும் பொய்யை சேர்த்து பரங்கிப்பேட்டை விஷயத்தில் வெளியிட்டுள்ளது.
“....சில மாதங்களுக்கு முன்பாக ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளான தமீம் அன்சாரி, ஜாகிர் உசேனும் பரங்கிப்பேட்டையில் தான் பிடிப்பட்டனர்....”
தமீமுல் அன்சாரி பற்றிய பத்திரிக்கை செய்திகளை பாருங்கள்.
அன்சாரி பரங்கிப்பேட்டையில் கைது செய்யப்படரா... அ.மார்க்ஸ் ஆவன அறிக்கை 2012
இப்படி மிக அபாண்டத்தை பரங்கிப்பேட்டையின் மேல் சுமத்திய குமுதம் ரிப்போர்ட்டர் முஸ்லிம்களுக்கெதிரான சிந்தனையை உள்வாங்கிய பத்திரிக்கையாகவும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து தன்னை “பயங்கரவாத பத்திரிக்கை”யாக அடையாளங்காட்டியுள்ளது.
பத்திரிக்கை நடத்தும் தகுதியற்ற இவர்களின் இந்த ஆக்கம் பரங்கிப்பேட்டையின் இளைஞர்களை பலரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பல இளைஞர்களை மனரீதியாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
பரங்கிப்பேட்டையைப் பற்றி எழாத வேண்டிய வரலாறு எத்தனையோ இருக்கும் போது அபாண்டத்தையும் அவததூரையும் வரலாறக்க முயற்சித்துள்ளது “குமுதம் ரிப்போர்டர்”
சுனாமி உட்பட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனித நேயத்துடன் செயல்படும், அதையோ கொள்கையாக கொண்டுள்ள முஸ்லிம்கள் அதிகம் வாழும் பரங்கிப்பேட்டையைப் பற்றி கடும் அவதூறை பரப்பிய குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கைக்கு எதிராக - அதன் பயங்கரவாத எழுத்தை கண்டித்து - அந்த பத்திரிக்கையை மண்டியிட வைக்கும் ஒரு பெரும் முடிவு பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் எடுப்பார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.
நன்றி:pnotimes
நன்றி:pnotimes










0 கருத்துகள்:
கருத்துரையிடுக