நியூயார்க்: மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அந்த விமானத்தில் 298 இருந்த அனைவர்களும் உயிரிழந்தனர் இதனிடையே அதனை சுட்டது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. அதேசமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உக்ரைனும் ரஷ்யாவும் பரஸ்பர குற்றம்சாட்டி வருகின்றன.
சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH-17 உக்ரைன் நாட்டிற்கு மேலே பறந்து கொண்டிருந்த போது எரிந்து சாம்பலானது. அதில் பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர்.
மலேசிய விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் உள்துறை அமைச்சக ஆலோசகர் தெரிவித்தார்.
இந்நிலையில், அதை கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்சாண்டர் போராடாய் மறுத்துள்ளார். உக்ரைன் விமானப்படைதான் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய அரசு டி.வி.க்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். ஆனால், அதை உக்ரைன் அதிபரின் அலுவலகம் மறுத்துள்ளது. ஏற்கனவே 2 விமானங்களை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்தான், இதையும் செய்ததாக அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
மேலும் விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக ஒரு முழுமையான மற்றும் வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். "சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புகளுடன் நான் நெருக்கமாக அறிக்கைகளை கண்காணித்து வருகிறேன். இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான மற்றும் வெளிப்படையான சர்வதேச விசாரணை தேவை தெளிவாகியுள்ளது” என்று பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விவாதித்துள்ளனர்












0 கருத்துகள்:
கருத்துரையிடுக