வெள்ளி, 11 ஜூலை, 2014

காஸா மீது இஸ்ரேல் வெறியாட்டம்.. பிஞ்சு குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பலி!!

காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் 4வது நாளாக தொடர் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த கொடூர தாக்குதலில் பிஞ்சு குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேலின் தொடர் விமான தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள்
குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகியுள்ளனர்.
திங்கட்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் இந்த உக்கிரமான தாக்குதல்களில் நேற்று மட்டும் 300 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியுள்ளது. 
கடந்த 4 நாட்களாக இஸ்ரேல் போர் விமானங்கள், காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக் கொண்டு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து வருகிறது.
இதுவரை காசாவில் 750க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளன. அதேபோல் இஸ்ரேல் மீது ம் ஹமாஸ் பேராளிகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொத்து கொத்தாக, குடும்பம் குடும்பாக இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு அப்பாவி பாலஸ்தீனியர்கள் பலியாகி வருகின்றனர்.
ஆளில்லா போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என அனைத்து வகையான வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் தொடருகிறது.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் இயக்கத்தினரும் முதல் முறையாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை இலக்கு வைத்து சரமாரி ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவற்றில் பலவற்றை இஸ்ரேல் இடைமறித்து அழித்துவிட்டதாக கூறுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக