ஞாயிறு, 18 மே, 2014

PNO - புகைப்பட போட்டி 2014- முடிவுகள்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை வரலாற்றில் முதன் முறையாக புகைப்பட துறையில் ஆர்வம் இருப்பவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நடந்து முடிந்த   PNO புகைப்பட போட்டி- 2014-க்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது பரங்கிப்பேட்டையின் சகோதரர்கள் சிலரால் இந்த புகைப்படப்போட்டி  நடத்தப்பட்டது ...

திறமையானவர்களை அடையாளம் காணும் விதமாக தேர்ந்தெடுக்கபட்ட புகைப்படங்கள் சிறந்த புகைப்பட வல்லுனர்களாலும்,போட்டி ஆலோசனை குழு கலந்தாய்வு செய்தும் புகைப்படங்கள் தேர்ந்தெடுக்க பட்டன..!!!
போட்டிக்கு அனுப்பிய அனைத்து புகைபடங்களும் மிகவும் அருமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது,பரிசு பெரும் புகைப்படங்கள் மேலோட்டமாக தேர்ந்தெடுக்காமல் அந்த புகைப்படம் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இருந்ததாலும், மேலும் நேர்த்தியான ...Creativity,Clarity,Sharpness,Brightness,Effort அடிப்படையிலும் தேர்ந்தெடுத்து வரிசை படுத்தப்பட்டுள்ளது...!!!
முதல் பரிசு ரூ 3000/ - Mohamed Irfan. M
இரண்டாம் பரிசு ரூ 2000 - M.H.MOHAMED ABDUL KADER
மூன்றாம் பரிசு(இருவருக்கு) - ரூ 500 வீதம் - M.A.Aasik Rahman / Fakrudeen Ali Ahamed
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
புகைப்படம் அனுப்பி விதிகளுக்கு உட்பட்டு இருந்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

                                          

முதல் பரிசு பெற்ற புகைப்படம்

இரண்டாம் பரிசு பெற்ற புகைப்படம்


மூன்றாம் பரிசு பெற்ற புகைப்படம் 1


மூன்றாம் பரிசு பெற்ற புகைப்படம் 2
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக