செவ்வாய், 6 மே, 2014

தமிழகத்தில் பரவலாக மழை

சென்னை:வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையை அடுத்து இன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது .
சென்னை, மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் காலை முதலே மழை பெய்தது . மேலும்  கும்பகோணம், திருவிடைமருதூர், வலங்கை மான், சீர்காழி,சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களிலும்  காற்றுடன் கூடிய கன மழை பெய்தது .
கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் இந்த வேளையில் மழை  பெய்தது  பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது
இதனிடையே தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2 வது நாளாக திங்கள்கிழமையும் மழை பெய்தது , கத்திரி வெயிலின் தாக்கம் காணமல் போய் விட்டது.
கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் திங்கள்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டர்): அண்ணாமலைநகர் 51, சிதம்பரம், கொத்தாவாச்சேரி 49, விருத்தாசலம் 48.30, காட்டுமன்னார்கோயில் 46, லால்பேட்டை 36, புவனகிரி 28, சேத்தியாத்தோப்பு 24.20, பரங்கிப்போட்டை 24, வானமாதேவி 21, கடலூர் 16.40, ஸ்ரீமுஷ்ணம் 15, பண்ருட்டி, மே.மாத்தூர் 2 என மாவட்டத்தில் மொத்தம் 411.90 மில்லி மீட்டர், சராசரியாக 19.61 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக