நியூயார்க் :இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் எந்த அரசுக்கும் இல்லாத வகையில் மக்கள் தந்துள்ளஅமோக ஆதரவுடன் பிரதமர் பதவிக்கு தேர்...ந்தெடுக்கப்பட்டுள்ள மோடிக்கு,நாட்டின்
எதிர்காலத்தைச் சிறப்படையச் செய்ய வரலாறு வாய்ப்பை அளித்திருக்கிறது. பெரும்பாலான இந்தியர்களும், இந்தியாவின் நண்பர்களும் மோடியுடன் முன்னேறவே விரும்புகிறார்கள். கடந்த காலத்தை மறந்துவிட்டு எதிர்காலத்தில் கவனம்செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
அவர்கள் கூறும் ‘கடந்த காலம்’ மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்த வகுப்புக் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்,அதிலும் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்
கொல்லப்பட்டது. துரதிஷ்டவசமாக ‘பல விஷயங்கள்’ அந்தக் கடந்த காலத்தை அப்படியே உயிர்ப்புடன் வைத்திருந்து பொருளாதார வாக்குறுதிகளைப் புதிய அரசு நிறைவேற்ற முடியாமல் தடை செய்யும். குஜராத்தில் 2002-ல், நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டு இப்போதும் 86 முகாம்களில்
தங்கியிருக்கும் 4,000 முஸ்லிம் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவர்களில் 30 விழுக்காடு குடும்பங்களுக்க ு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. குஜராத்தில் அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் சாதனைப்படைத்துவிட்டதாக மோடி பெருமைப் பேசிக்
கொண்டாலும் இந்த முகாம்களுக்குக் குடிநீர்,மின்சாரம், சுகாதார வசதிகள் போதிய அளவில்
செய்யப்படவில்லை. நியாயமான, வலுவான நீதித்துறையை ஏற்படுத்துவதில் தனக்குள்ள
உறுதிப்பாட்டைப் புதிய அரசு வெளிப்படுத்த வேண்டும். 2002 கலவரம் தொடர்பான வழக்குகள் இன்னமும் நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உட்பட எந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகளிலும் புதிய அரசு தலையிடக்கூடாது!”தி நியூயார்க் டைம்ஸ்’ இப்படி சொல்கிறது








0 கருத்துகள்:
கருத்துரையிடுக