சிதம்பரம் :சிதம்பரம் மக்களவைத் தனி தொகுதியில் 37 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மக்களவை தனித் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விட 1,28, 495 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக
1977-ல் அதிமுக வெற்றி பெற்றது. அதன் பின்னர் இத்தொகுதியில் அதிமுக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1977-ல் அதிமுக வெற்றி பெற்றது. அதன் பின்னர் இத்தொகுதியில் அதிமுக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1957ம் ஆண்டு இரட்டை மெம்பர் தொகுதியாக இத்தொகுதி இருந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.கனகசபைபிள்ளை, எல்.இளையபெருமாள் ஆகியோர் எம்பியாக வெற்றி பெற்றனர். பின்னர் 1962 தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.கனகசபைபிள்ளை, 1967, 1971-ல் திமுகவைச் சேர்ந்த வி.மாயவன்,
1977-ல் அதிமுகவைச் சேர்ந்த ஏ.முருகேசன், 1980-ல் திமுகவைச் சேர்ந்த வே.குழந்தைவேலு, 1984, 1989. 1991 ஆகிய மூன்று முறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ப.வள்ளல்பெருமான், 1996-ல் திமுகவைச் சேர்ந்த வே.கணேசன், 1998-ல் பாமகவைச் சேர்ந்த தலித் எழில்மலை, 1999, 2004-ல் பாமகவைச் சேர்ந்த இ.பொன்னுசாமி, 2009-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

நடைபெற்ற 14 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக நான்கு முறையும், பாமக இருமுறையும், அதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலா ஒருமுறையும் வென்றுள்ளது. தற்போது 37 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளதால் அதிமுகவினர் மிகவும் மகிழ்ச்சியடைந்து கொண்டாடி வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக