வியாழன், 1 மே, 2014

கோடை வெயில் 113 டிகிரியை எட்டும் : வானிலை மையம் அதிர்ச்சி தகவல்

சென்னை :கோடை வெயிலின் தாக்கம் கத்திரி தொடங்கும் முன்பே அதிகமாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு கோடை வெயில் 113 டிகிரி வரை எட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்குகிறது. அதற்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரியை எட்டிவிட்டது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், காற்றில் ஈரப்பதம் குறைந்த காரணத்தால் அனல்காற்று பயங்கரமாக வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 2003–ம் ஆண்டு மே 31–ந் தேதி உச்சகட்ட வெயில் அளவாக 113 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. அதே போல் இந்த ஆண்டும் 113 டிகிரி வரை வெப்பம் வாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிக பட்சமாக குஜராத்தில் 112 டிகிரி வரை இப்போது வெப்பம் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்த படியாக ஜெய்ப்பூரில் 111 டிகிரியும், நாக்பூரில் 110 டிகிரியும் வெப்பம் நிலவுகிறது. தமிழ் நாட்டில் இந்த ஆண்டு திருச்சியில் அதிக அளவு வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக