திங்கள், 21 ஏப்ரல், 2014

முஸ்லிம்கள் வீடு வாங்கத் தடை - காலி செய்ய கெடு வி.ஹெச்.பியின் 'தொகாடியா' காட்டுமிராண்டித்தனம்!

 
பாவ்நகர்: குஜராத் மாநிலத்தில் பாவ்நகரில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வீட்டை முஸ்லிம்கள் வாங்க விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் தொகாடியா தடை விதித்துள்ளதுடன் முஸ்லிம்கள் வீட்டை காலி செய்யவும் கெடு விதித்திருப்பதாக வெளியான செய்திகளால் அங்கு பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் மெகானி சர்க்கிள் என்ற பகுதியில் ஹிந்து ஒருவருக்குச் சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார். ஆனால் முஸ்லிம்கள் இப்படி சொத்துகள் வாங்குவதை ஹிந்து தீவிரவாத அமைப்புகளான ராம் தர்பார்ஸ், ராம் தூன்ஸ் போன்றவை தடுப்பது அங்கு
வழக்கம்.இந்த நிலையில் தற்போது முஸ்லிம் தொழிலதிபர் வீடு வாங்கியதற்கும் இந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த விவகாரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தும் தலையிட்டுள்ளது. முஸ்லிம் தொழிலதிபர் வாங்கிய வீட்டை ஆக்கிரமித்து அங்கே பஜ்ரங் தள் பெயர் பலகையை தொங்க விட வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தொகாடியா உத்தரவிட்டும் இருப்பதாக செய்திகள் வெளியாகின.மேலும் ஹிந்துக்கள் சொத்துகளை முஸ்லிம்கள் வாங்குவதை தடுக்க பாவ்நகரை கலவரம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ஹிந்துக்களின் அசையா சொத்துகளை வேறு சமூகத்தினர் வாங்க முடியாது. அத்துடன் இப்படி சொத்துகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் கொள்வதன் மூலம்தான் வேறு சமூகத்தினர் சொத்து வாங்குவதை தடுக்க முடியும் என்று தொகாடியா பேசியதாகவும் கூறப்படுகிறது.மேலும் அந்த வீட்டில் வசித்து வரும் முஸ்லிம்கள் வீட்டைக் காலி செய்ய 48 மணி நேர கெடுவையும் தொகாடியா விதித்துள்ளாராம்."ராஜிவ் காந்தி கொலையாளிகளே தூக்கிலிடப்படாத நிலையில் எந்த ஒரு வழக்கு வந்தாலும் சந்திப்போம்" என்றும் தொகாடியா கேள்வி எழுப்பியதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன..
 
பாஜகவின் நிலை என்ன?
 
தொகாடியாவின் இந்த பேச்சுக்கு ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தொகாடியாவின் இந்த அடாவடித்தனமான செயல்பாடு குறித்து பாரதிய ஜனதா கட்சி என்ன கருத்து தெரிவிக்கப் போகிறது? அதன் நிலைப்பாடு என்ன? என்று ஐக்கிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக