வியாழன், 24 ஏப்ரல், 2014

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு : 72.83% வாக்குப் பதிவு

சென்னை :தமிழகத்தில் மொத்தம் உள்ள 39தொகுதிகளில் 6 மணி நிலவரப்படி  72.83% சதவீதம் வாக்குகள் சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.99 வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.86% வாக்குகள் பதிவாகின. இன்னும் சில இடங்களில் வாக்குப்பதிவு விபரம் வராததால், முழுமையான விவரம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
 பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்ததால் ஒருசில இடங்களில் நிகழந்த சிறுசிறுவன்முறைகள்  தவிர நாடு முழுவதும் அமைதியான முறையில் வாக்குபதிவு நிறைவடைந்தது. பதிவான் வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு .வரும் மே.16 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 117தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தின் ஆலந்தூர் சட்ட சபை தொகுதில்  நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் அமைதியான முறையில் நிறைவடைந்தது.

புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

வாக்குப்பதிவு முடிந்த மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மெழுகுவர்த்தியின் மூலம் அரக்கினை உருக்கி, அடையாள அட்டை இட்டு சீல் செய்து அனுப்ப துவங்கியுள்ளனர் தேர்தல் சாவடி அதிகாரிகள்.

கடலூர்  தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி  76%

 
சிதம்பரம் (தனி)  தொகுதியில் மாலை 5 நிலவரப்படி  76.39%  வாக்குகள் பதிவாகியுள்ளது


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக