புதன், 23 ஏப்ரல், 2014

லோக்சபா தேர்தல் தமிழகம்,புதுவையில் 144 தடை உத்தரவு

சென்னை:லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.புதுச்சேரியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க முதல்முறையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவை தேர்தல் ஆணையம் அதிரடியாக பிறப்பித்துள்ளது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணி ஓய்ந்தது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 36 மணி நேரத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
இந்த உத்தரவுபடி 5 பேருக்கு மேல் கூட்டமாக ஓரிடத்தில் கூடக்கூடாது. தடை உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"
தமிழகம் மற்றும் புதுவை வரலாற்றிலேயே முதல் முறையாக இப்போதுதான் முழுமையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானது.
கடலூர் மாவட்டத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுப்பதிவு நாளை (24ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், ஓட்டுப் பதிவு முடிவதற்கு, 48 மணி நேரம் முன்னதாக, தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதைத் தடுக்கும் வகையில், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144ன் படி, 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூடுதல், ஊர்வலம் செல்லுதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, நேற்று மாலை 6:00 மணி முதல், நாளை (24ம் தேதி) காலை 6:00 மணி வரை நடைமுறையில் இருக்கும். இத்தகவலை கலெக்டர் கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக