ஞாயிறு, 30 மார்ச், 2014

கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் இறால் மீன் வளர்ப்பு பயிற்சி

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் நவீன இறால் மீன் வளர்ப்பு மற்றும் செயல்முறை பற்றிய இறால் பண்ணையாளர்களுக்கான ஒருநாள் கருத்தரங்க பயிற்சி நடந்தது. கடல் அறிவியல் புல முதல்வர் பேராசிரியர் கதிரேசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்றார். கடல் உற்பத்தி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் டாக்டர் கந்தன் பங்கேற்று, இன்றைய சூழலில் இறால் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
பண்ணை அமைப்பு மற்றும் இறால் வளர்ப்புக்கான காலநிலை குறித்து சென்னை மேரிடெக் அமைப்பை சேர்ந்த
சந்தானகிருஷ்ணன், தமிழ்நாடு மீன்வளத்துறை அலுவலர் கருணாகரன், அக்குவா பண்ணை மேலாளர் கோவிந்தராஜன், டாக்டர் பர்தா உள்ளிட்ட பலர் பேசினர். மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு துறை டாக்டர் சந்திரசேகர் மீன் வளர்ப்பு பற்றிய கை யேடு களை வழங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் பதூல்ஹக், குணாளன், முருகன், மாயாவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக