ஞாயிறு, 30 மார்ச், 2014

பரங்கிப்பேட்டை கஜ்ஜாலி இந்திய பூப்பந்தாட்ட அணிக்குத் தேர்வு

பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை  சார்ந்த எஸ்.கே. முஹம்மது கஜ்ஜாலி சர்வதேச போட்டியில் விளையாட இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

பரங்கிப்பேட்டை மேட்டுத் தெருவை சார்ந்த எஸ்.கே. முஹம்மது கஜ்ஜாலி மேற்கு ரெயில்வேயின் பூப்பந்தாட்ட அணி யில் விளையாடி வந்தார்  தேசிய பூப்பந்தாட்டப் போட்டி நட்சத்திர அணிகளுக்கிடையே நடைப்பெற்றத போட்டிகளில் விளையாடிய அவரின் திறமையான ஆட்டத்திர்காக தற்போது சர்வதேச போட்டியில் விளையாட இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இவர் பரங்கிப்பேட்டை BMD கிளப் பூப்பந்தாட்ட அணியின் விளையாட்டு வீரரும்ஆவார்

அகில இந்திய அளவில் நடைபெற்ற 49-வது இரயில்வே பூப்பந்தட்டப் போட்டியில் மேற்கு இரயில்வே (Western Railways) கஜ்ஜாலி தலைமையில் (கேப்டன்ஷிப்)
முதன்முறையாக கோப்பையை வென்றது  இவரது திறமையான ஆட்டத்திற்காக
ஸ்டார் ஆஃப் இந்தியா என்கிற சிறப்பு விருதினையும்  பெற்றுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது
நேபாலில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் இடம்பெற்றுளார்

 
மேலும் மேலும் சகோதரர் கஜ்ஜாலி வெற்றிகளை குவிக்க   PNO Express  சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


 

 
 
 

 
 
 

2 கருத்துகள்: