வியாழன், 13 மார்ச், 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனுக்கள்... குவிந்தன தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க மேலும் வாய்ப்பு


கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் மொத்தம் 27 ஆயிரம் பேர் மனு கொடுத்துள்ளனர். அவற்றில் கடலூர் தொகுதியில் தான் அதிகளவில்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்துள்ளனர். மத்திய அமைச்சரவையின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளதால் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல்
ஆணையம் 18 வயது நிரம்பிய இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் ஓட்டுபோட தகுதியுடையவர்களாக அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஓட்டும் விலை மதிப்பற்றது என்பதால்
அவர்களின் உரிமையை பயன்படுத்த தகுதியின் அடிப்படையில் முடிந்த வரை ஓட்டு போடுவதற்கு தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது. தேர்தலையொட்டி தகுதியுள்ள இளைஞர்கள் யாரும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 10 நாட்கள் முன்பு வரை புதிய வாக்காளர்கள் சேர்க்க வகை செய்யப்பட்டுள்ளது. அதற்காக கடந்த 9ம் தேதி வாக்காளர்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,154 ஓட்டுச் சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தது. இதற்காக அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் ஊழியர்களை நியமித்து மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் ஏராளமான வாக்காளர்கள் 6ம் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.திட்டக்குடி தொகுதியில் 1,032 பேரும், விருத்தாசலத்தில் 2,779, நெய்வேலியில் 2,620, பண்ருட்டியில் 1,939, கடலூரில் 4,557, குறிஞ்சிப்பாடியில் 3,112, புவனகிரியில் 4,308, சிதம்பரத்தில் 4,086, காட்டுமன்னார்÷
காவிலில் 2,569 பேர் என மொத்தம் 27 ஆயிரத்து 2 பேர் மனு கொடுத்துள்ளனர்.அவற்றில் மற்ற தொகுதிகளைக் காட்டிலும், கடலூர் தொகுதியில் கூடுதலாக மனு கொடுத்துள்ளனர். இந்த
மனுக்கள் மீது தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் மனுக்கள் சரிபார்க்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனுக்கள் அந்தந்த தாலுகா தேர்தல் பிரிவு அலுவலகங்களில் பெறப்படும். இறுதியாக பெறப்படும் புதிய மனுக்கள் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக இறுதி செய்யப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக