பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை வத்தகரை மீன் ஏலம் விடும் தளத்துக்கு 20 டன் கவளை மீன்கள் வந்தது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
பரங்கிப்பேட்டை பகுதி கடலோர மீனவ கிராமங்களான சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன்பேட்டை, குமாரப்பேட்டை, மடவாப்பள்ளம், அய்யன்பேட்டை, அன்னப்பன்பேட்டை, மாலுமியார்பேட்டை, பேட்டோடை, பெரியக்குப்பம், முடசல்ஓடை, முழுக்குத்துறை, எம்.ஜி.ஆர்.திட்டு, பில்லுமேடு உள்பட சுமார் 50–க்கும் மேற்பட்ட கிராமங்களை மீனவர்கள் சுமார் 200–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்று முன்தினம் இப்பகுதி மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். மீன்பிடிக்க நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் நேற்று காலை அன்னங்கோவில் மீன் ஏலம் விடும் தளத்துக்கு வந்தனர்.
அப்போது அவர்களின் படகுகளில் அதிக அளவு கவளை மீன்கள் கிடைத்திருந்தது. சுமார் 20 டன் கவளை மீன்கள் சிக்கியதும் தகவல் அறிந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதி வியாபாரிகள் அன்னங்கோவில் மீன் ஏலம் விடும் தளத்தில் குவிந்தனர்.
இந்த வகை மீன்கள் அதிகம் இங்கு கிடைக்காததால் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். குறிப்பாக கேரளா மாநில வியாபாரிகள் அதிக அளவில் இந்த மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.
ஒரு டன் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலைபோனது. இது தவிர வஞ்சிரம், கானாங்கத்தை, சூறை ஆகிய மீன்களும் கிடைத்தன. வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.400, கானாங்கத்தை கிலோ ரூ.100, சூறை கிலோ ரூ.80 –க்கும் விலை போனது. நேற்று வழக்கத்தை விட அதிக அளவு மீன்கள் சிக்கியதால் வத்தகரை மீன் ஏலம் விடும் தளத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மீன்கள் அதிக அளவில் கிடைத்ததால் பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக