பரங்கிப்பேட்டை மற்றும் கடலூர் உள்நாடு வெளிநாடு மக்களிடையே பிரபல முகநூல் குழுமங்களின் ஒன்றான திண்ணை குழுமம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்த "நான் ஜமாஅத் தலைவரானால்.....?" எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியில் பலர் கலந்துக் கொண்டனர். திண்ணை குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட இக்கட்டுரைப் போட்டிக்கு நடுவர்களாக ஜி. நிஜாமுத்தீன், முஹம்மது யாசின், தமீமுல் அன்சாரி ஆகியோர் பங்கேற்றனர். அதன்படி அறிவித்த இறுதி முடிவில் நௌசாத் அலி, அப்துர் ரஹ்மான், முஸ்தாக் சமீர் ஆகியோரது கட்டுரைகள் சிறந்த மூன்று கட்டுரைகள் என்றும், .கலீல் பாகவி, வஜ்ஹுதீன், ஷாகுல் ஹமீத், ஹாஜா முஹைதீன் ஆகியோரது கட்டுரைகள் நற்சான்று பெறும் கட்டுரைகள் எனவும் அறிவித்துள்ளது.
இது குறித்து திண்ணைக் குழுமத்தின் செய்திக்குறிப்பில், " நான் ஜாமத் தலைவர் ஆனால் , ஒரு மிக சிறந்த தலைப்பானது ஒரு ஊருக்கு மட்டுமின்றி இன்ன பிற பல ஊர்களுக்கும் (ஊர்) பொறுப்பில் இருக்கும் பலருக்கும் இது பொருந்தகூடியது. ஒரு அழகான தலைப்பை மிக அழகாக, ஆழமாக, ஆத்மார்த்தமாக திறமைகளை கொண்டு ஊர் மக்கள் பலரும் பயன் பெறும் வகையில் இங்கு சிறப்பாக கட்டுரையே பதிந்த அத்தனை கட்டுரையாளர்களையும் மனம் திறந்து பாராட்டுவதுடன், இந்த கட்டுரை யின் மூலம் நமது ஊரில் இருக்கும் எண்ணற்ற திறமையானவர்களின் எண்ணங்களை எழுத்து வடிவில் நாம் கண்டதுடன், பார்வையாளர்கள் தெரிவித்த மதிப்புமிக்க கருத்துக்களையும் பார்க்கும் போதும் எண்ணிலடங்கா பொறுப்புக்கள், பணிகள் நிறைந்த ஒரு கண்ணியமான பதவி இது என்பதை நாம் கண்டிப்பாக உணர்ந்து இருக்க கூடும் அவ்வகையில் .இங்கு கட்டுரை பதிந்த அத்தனை பேரும் பலவேறு புதுமையான திட்டங்களை இங்கு முன்மொழிந்தார்கள். அவையாவும் ஒரு செம்மையான நிர்வாகத்தை உள்ளடக்கும் வகையில் ஒரு சிறந்த தலைவரின் நியமனத்தை நிலை நிறுத்தி எடுத்துரைக்கப்பட்ட கருத்துக்களே ஆகும்.
இதன் மூலம் எவை நமக்கு தேவை, எந்த வழிமுறைகள் சிறந்தது, நிலையான நிர்வாகம், நிர்வாக தேர்வு முறை, உள்ளிட்ட பல கருத்துக்களையும் நாம் தொலை நோக்கு பார்வையில் பார்த்தோம், இவைகள் அனைத்தும் நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததியினர் பயனுக்கு ஏற்றார் போல அமைந்துள்ளது. முரண்பாடுகள் அகற்றப்பட்டு, ஒரு முன்னுதாரணத்தை தந்திடும் வகையில் ஊரின் ஜமாத்துகள் அமைந்திடும் வகையில் எதிர்கால இளைனர்களின் பங்கும், ஊர் பெரியவர்களின் ஒற்றுமையும் , ஊர் மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என கருத்தில் கொண்டு, எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நாம் அணுகும் அவசியங்களை வரும் காலங்களில் தந்து அருள்வனாக என்று கூறி கொண்டு , இந்த கட்டுரை போட்டியில் உள்ள சில முக்கிய முத்தான கருத்துக்களை ஊர் பிரதிநிகளின் கோரிக்கையாக கொண்டு நிகழ்கால நிர்வாகங்கள் நிவர்த்தி செய்திடும் வகையில் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இக்கட்டுரை போட்டிக்கு முழு ஒத்துழைப்பும் தந்த உறுப்பினர்கள், கட்டுரையாளர்கள், ஆலோசகர்கள், MYPNO இணைய தளம் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துள்ளது.
நன்றி:mypno

0 கருத்துகள்:
கருத்துரையிடுக