பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு ஊக்க பரிசுகள் வழங்கி மனித உரிமைகள் கழகம் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் பாராட்டு விழா நடைப்பெற்றது.முன்னதாக கடந்த வாரம் பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள உயர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கற்றல் அடைவுத் திறன் தேர்வுகள் நடத்தப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் உயர் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கற்றல் அடைவுத் திறன் தேர்வுகள் நான்கு நாட்கள் நடத்தப்பட்டன. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குதமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் கற்றல், எழுதுதல், பேசுதல், வாசித்தல், நினைவுத் திறன் போன்ற பல்வேறு அடிப்படை தேர்வுகள், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு மனித உரிமைகள் கழகம் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் பாராட்டு விழா நடைப்பெற்றது. அரியகோஷ்டி ஊராட்சி பள்ளியில் அரியகோஷ்டி ஊராட்சி மன்றத் தலைவர் டி. ராஜேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இப்பாராட்டு விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி. பூராசாமி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ், பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளர் லாமேக், துணை ஆய்வாளர் பாண்டிச் செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக